பீகாரில் வேலை வாங்கித் தருவதாக கூறி 100க்கும் மேற்பட்ட பெண்களை அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், பெண்ணை பெல்ட்டால் கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய செய்தி தொகுப்பு.
வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து கடந்த 3 ஆண்டுகளாக மோசடி கும்பல் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் வழக்கு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த கும்பலின் குற்றச் செயல்கள் பீகாரைத் தாண்டி உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் வரை பரவியுள்ளதாக கூறப்படுகிறது.
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், 18,000 முதல் 20,000 ரூபாய் சம்பளம் தருவதாக கூறி ஏமாற்றிய கும்பலிடம் இருந்து தப்பி ஓடிய பெண், தன்னை அடித்து உதைத்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக வலைதளங்களில் வெளியான பெண்களுக்கான காலியிடங்கள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலைக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்ட போது பயிற்சி கட்டணமாக 20000 ரூபாய் செலுத்துமாறு கேட்டதாக கூறினார்.
கட்டணத்தை செலுத்திய பின்னர், தன்னை அஹியாபூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மற்ற இளம் பெண்களுடன் அடைத்து வைத்ததாகவும், 3 மாதங்களாக சம்பளம் வழங்காததால் இது குறித்து கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு அந்த நிறுவனத்தின் உரிமையாளர் திலக் பணம் தருவதாக உறுதியளித்ததாகவும் கூறினார். மேலும் 50 இளம் பெண்கள் சேர்க்கப்பட்டால் கூடுதலாக 50,000.
சிலருடன் சேர்ந்து, உரிமையாளர் அவளை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் மற்றும் பெல்ட்டால் அடித்தார்.
9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முசாபர்பூர் துணை எஸ்பி வினிதா சின்ஹா தெரிவித்தார். இந்நிலையில், குற்றவாளிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என பீகார் துணை முதல்வர் விஜய் சின்ஹா உறுதி அளித்துள்ளார்.
பீகாரில் இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. வேலை வாய்ப்பை எதிர்பார்த்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் இளம் பெண்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேற்பட்டதாக அறியப்படுகிறது.
கடந்த 2022ம் ஆண்டு முதல் பீகார் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பல புகார்கள் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த வேலை மோசடி கும்பலுக்கு எதிராக கிழக்கு சம்பாரண், முசாபர்பூர் போன்ற மாவட்டங்களில் ஏற்கனவே பல புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியல் தொடர்பு கொண்டு இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் மோசடி நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
Discussion about this post