மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விரைவில் விடுவிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.
டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
இதில் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவித்தும், வரிகளை சமமாக விநியோகித்தும் மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என்று உறுதியளித்தார்.
மேலும், சீர்திருத்த நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு வழங்கும் 50 ஆண்டுகால வட்டியில்லா கடன் திட்டத்தை மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின் போது தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.
சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்துக்கான நிதியை விரைந்து வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Discussion about this post