கேரளாவில் வனத்துறையினர் அமைத்த கூண்டில் 3 மாடுகளை கொன்ற புலி பிடிபட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குறிப்பாக கெணிச்சிரா பகுதியில் சாபு என்பவரின் வீட்டு மாடு மற்றும் பென்னி வளர்ந்து வந்த 2 மாடுகளை புலி கொன்றுள்ளது.
புலி வந்து போவதை செல்போனில் வீடியோ எடுத்து வனத்துறையினரிடம் காட்டினார் சாபு. இதையடுத்து வனத்துறையினர் சாபு வீட்டில் கூண்டு வைத்து புலியால் கொல்லப்பட்ட பசுவின் உடலை வைத்திருந்தனர்.
இந்நிலையில், மீண்டும் சாபு வீட்டிற்கு வந்த புலி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. பல நாட்களாக மிரட்டி வந்த புலி பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
Discussion about this post