கேரளாவின் கொச்சியில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நள்ளிரவு 1.22 மணிக்கு கொச்சியில் இருந்து ஏர் இந்தியா விமானம் லண்டன் புறப்பட தயாராக இருந்தது. இந்நிலையில், அந்த விமானத்துக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அதே விமானத்தில் பயணம் செய்யவிருந்த சுஹைப் என்ற வாலிபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
கொச்சி போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், மதியம் 12 மணியளவில் விமானம் லண்டனுக்கு புறப்பட்டது.
Discussion about this post