நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்தவர்களுக்கு அரசியல் சாசனம் பற்றி பேச தகுதி இல்லை என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
1975ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்ட X தளப் பதிவில், ஒவ்வொரு இந்தியரும் மதிக்கும் அரசியல் சட்டத்தை காங்கிரஸ் கட்சி எப்படி முற்றிலுமாக நசுக்கியது என்பதை நெருக்கடி நிலையின் கறுப்பு நாட்கள் நமக்கு நினைவூட்டும் என்று கூறியுள்ளார்.
அவசர நிலை பிரகடனம் செய்தவர்களுக்கு அரசியல் சாசனம் பற்றி பேச தகுதி இல்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கூட்டாட்சி முறையை அழித்து அரசியல் சட்டத்தை மீறுவது காங்கிரஸ் கட்சிதான் என்றும் அவர் கூறினார்.
அவசர நிலை பிரகடனம் செய்யும் மனநிலை காங்கிரஸ் கட்சியினரிடையே இன்னும் நீடித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அதனால்தான் மக்கள் காங்கிரஸ் கட்சியை பலமுறை புறக்கணித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post