மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ அதிகாரப்பூர்வமாக கைது செய்துள்ளது.
டெல்லியின் மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு செய்ததாகக் கூறி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கை சிபிஐயும் கைப்பற்றியுள்ள நிலையில், கெஜ்ரிவாலை விசாரிக்க அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. இந்த மனு, விடுமுறை கால அமர்வு நீதிபதி அமிதாப் ராவத் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது கெஜ்ரிவாலை விசாரிக்க சிபிஐக்கு நீதிபதி அனுமதி அளித்தார். அதன்படி, சிபிஐ அதிகாரிகள் அவரை அதிகாரப்பூர்வமாக கைது செய்து நீதிமன்ற வளாகத்துக்கு அழைத்துச் சென்றனர். வழக்கு விசாரணையின் போது கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
Discussion about this post