நீட் ஓஎம்ஆர் தாள் நகலை தங்களுக்கு வழங்கக் கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் ஓஎம்ஆர் நகலை தங்களுக்கு வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி மனோஜ் மிஸ்ரா, எஸ்.வி.என்.பதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஓஎம்ஆர் தாள்களை வழங்கினால், அதில் உள்ள குறைபாடு என்ன என்பதை கண்டறியலாம் என மாணவர்களிடம் தெரிவித்தனர். மேலும், ஓஎம்ஆர் தாள்களில் உள்ள குறைபாடுகளையும் கண்டறிய முடியும் என மாணவர்கள் தெரிவித்தனர்.
OMR தாள்களின் நகல்களை வழங்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, மாணவர்களுக்கு ஓஎம்ஆர் தாள்கள் வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
மேலும், OMR தாள்கள் விவரங்கள் மற்றும் விளக்கங்களை தெரிவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாணவர்களுக்கு ஓஎம்ஆர் தாள்களை வழங்க எவ்வளவு காலம் ஆகும் என கேள்வி எழுப்பினர்.
ஓஎம்ஆர் தாள்களில் குறைகளை தெரிவிப்பதற்கு ஏதேனும் கால அவகாசம் உள்ளதா என்று கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் பதிலளிக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டனர்.
மேலும், தற்போதுள்ள நீட் வழக்குகளுடன் இந்த மனுவையும் இணைக்க நீதிபதிகள் முடிவு செய்து விசாரணையை ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Discussion about this post