அமர்நாத் யாத்திரை தொடங்குவதையொட்டி, யாத்ரீகர்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது X பதிவில் எழுதியிருப்பதாவது,
“புனித அமர்நாத் யாத்திரை தொடங்கும் தருணத்தில் யாத்ரீகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பாபா பர்பானியின் தரிசனம் மற்றும் ஆசீர்வாதத்திற்கான இந்த பயணம் சிவ பக்தர்களுக்கு அளவற்ற ஆற்றலை அளிக்கும்.
பக்தர்கள் அனைவரும் பாபா பர்பானியின் அருளால் பயனடைய வேண்டுகிறேன்” என்றார்.
Discussion about this post