உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற இடத்தில் நடந்த மதக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் உள்ள புல்லேரா என்ற கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் பிரசங்கம் செய்தார்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் பலத்த காயமடைந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் ஏட்டா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் பலர் உயர்ந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்ற உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post