சூரியனை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் திட்டமிட்டபடி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஆதித்யா எல்1 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
விண்கலம் பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தூரம் 125 நாட்கள் பயணித்து சூரியனுக்கு அருகில் உள்ள எல்1 என்ற லாக்ராஞ்சியன் புள்ளியில் நிறுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இந்த ஆண்டு ஜனவரியில் ஆதித்யா எல்-1 விண்கலம் எல்-1 புள்ளியை அடைந்தது. கடந்த மே மாதம் சூரிய ஒளியை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது.
இந்நிலையில், இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
ஆதித்யா எல்.1 விண்கலம் 178 நாட்கள் பயணம் செய்த பின்னர் லாக்ராஞ்சியன் புள்ளி-1 சுற்றி தனது சுற்றுப்பாதையை வெற்றிகரமாக முடித்தது.
Discussion about this post