ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டையொட்டி கஜகஸ்தான் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியை நேரில் சந்தித்து பேசினார்.
2 நாட்கள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 24வது உச்சி மாநாடு கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியை சந்தித்து பேசினார்.
இந்தியா – சீனா இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வரும் நிலையில், ஓராண்டுக்குப் பிறகு இரு நாட்டு பிரதிநிதிகளும் நேரில் சந்தித்துப் பேசினர். முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை 14ஆம் தேதி ஜெர்மனியில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் சந்தித்துப் பேசினர்.