புதுச்சேரி மற்றும் 23 மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங் அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில், 24 மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை பாஜக மேலிடம் நியமித்துள்ளது. பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி பாஜக பொறுப்பாளராக நிர்மல் குமார் சுரானா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களுக்கு பொறுப்பாளராக சம்பித் பத்ராவும், இணை பொறுப்பாளராக முரளிதரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக பொறுப்பாளராக ராதா மோகன் தாஸ் அகர்வால் மற்றும் இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சுதாகர் ரெட்டி ஏற்கனவே தமிழக பாஜக பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர கேரள மாநில பொறுப்பாளராக பிரகாஷ் ஜவடேகரும், இணை பொறுப்பாளராக அபர்ஜிதா சாரங்கியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் அந்தமான் நிக்கோபார், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 24 மாநிலங்களுக்கு பாஜக பொறுப்பாளர்கள் மற்றும் இணை பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post