இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதே தனது மூன்றாவது ஆட்சியின் இலக்கு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்திய வம்சாவளி மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
விழாவில் பேசிய அவர், மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள அவர், இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாற்றும் நோக்கில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தனது மூன்றாவது பதவிக்காலத்தில் ஏழைகளுக்கு 3 கோடி வீடுகள் கட்டித் தரவும், கிராமப்புறங்களில் வசிக்கும் 3 கோடி மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 3 கோடி பெண்களை லட்சாதிபதி மகளிர் திட்டத்தின் கீழ் லட்சாதிபதிகளாக மாற்றவும் இலக்கு நிர்ணயித்துள்ளேன் என்றார்.
இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.