பிரதமர் மோடிக்கு ரஷ்யாவில் அந்நாட்டின் உயரிய விருதை அதிபர் விளாடிமிர் புதின் வழங்கி கவுரவித்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார்.
அங்கு மாஸ்கோவில் உள்ள கிரெம்ளினில் அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், எரிபொருள், வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர்.
ரஷ்யாவின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ விருதை பிரதமர் மோடிக்கு விளாடிமிர் புடின் இன்று வழங்கி கௌரவித்தார்.
இந்த விருது கடந்த 2019 ஆம் ஆண்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இடையில் கோவிட் தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் இந்த விருதை இன்று வழங்கி கவுரவித்தார்.
புடினுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். எனக்கு வழங்கப்பட்ட விருது 140 கோடி இந்தியர்களுக்குக் கிடைத்த கவுரவம். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஆழமான நட்புக்கு இது மரியாதை என்று பிரதமர் மோடி கூறினார்.
மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் இந்திய-ரஷ்ய உறவுகள் வலுப்பெற்றுள்ளன. பிரதமர் மோடிக்கு விருது வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
Discussion about this post