பல்வேறு நாடுகளின் உயரிய விருதுகளை பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமருக்கு வழங்கப்படும் விருதுகள் உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கையும், பிரதமர் மோடியின் பங்களிப்பையும் பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த விருதுகள் பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்கு பார்வையை அங்கீகரிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், எக்ஸ் தள பக்கத்தில் பிரதமருக்கு வழங்கப்பட்ட பல்வேறு விருதுகளை எல்.முருகன் பட்டியலிட்டுள்ளார்.