குடும்பக்கட்டுப்பாடு குறித்து முடிவெடுக்க பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.
உலக மக்கள் தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா,
மத்திய அமைச்சர் அன்பிரியா படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, குடும்பக்கட்டுப்பாடு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், தேவையற்ற கர்ப்பத்தால் பெண்கள் பாதிக்கப்படக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
இதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், கருத்தரிப்பு விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Discussion about this post