குடுவையில் வெடிகுண்டு இருக்குமோ என்ற அச்சத்தில், உள்ளே என்ன இருக்கிறது என்பதை யாரும் திறக்கவில்லை.
கேரள மாநிலம் கண்ணூர் அருகே செங்கலா பகுதியில் தனியார் ரப்பர் தோட்டம் உள்ளது. இங்கு மழைநீர் வடிகால் அமைக்க தொழிலாளர்கள் குழி தோண்டினர். தோட்டத்தின் ஒரு பகுதியில் 10 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டது. அப்போது குடம் மண்ணில் புதைந்து கிடப்பதை பார்த்தனர். தொழிலாளர்கள் அதை வெளியே எடுத்தனர்.
ஆனால், வெடிகுண்டாக இருக்கலாம் என அஞ்சிய தொழிலாளர்கள், உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்கவில்லை. இதுகுறித்து கண்ணூர் நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு வந்து குடத்தை சோதனை செய்தனர். அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் ஜாடியை திறந்து பார்த்தபோது உள்ளே புதையல் இருப்பது தெரியவந்தது.
ஜாடிக்குள் 17 முத்து மணிகள், 13 தங்கப் பதக்கங்கள், 4 காசிமணி மாலைகள், 2 கம்மல்கள் மற்றும் வெள்ளி நாணயங்கள் இருந்தன. இதையறிந்த அப்பகுதி மக்கள் பொக்கிஷங்களை நேரில் காண ஆர்வத்துடன் குவிந்தனர். இதையடுத்து போலீசார், பொருட்களை மீட்டு வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மண்ணில் இருந்து மீட்கப்பட்ட தங்கம் தளிபரம்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. தகவல் அறிந்த தொல்லியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Discussion about this post