உத்தரகண்ட் மாநிலம் பாகேஷ்வரில் உள்ள சுந்தரதுங்கா பனிப்பாறையில் 16,500 அடி உயரத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது. பாபா யோகி சைதன்ய ஆகாஷ் என்பவர் அரசு விதிமுறைகளை மீறி இந்த கோவிலை கட்டினார்.
அது பற்றிய செய்தி தொகுப்பு.
பாகேஷ்வர் என்பது உத்தரகாண்ட் மாநிலத்தில் சரயு மற்றும் கோமதி நதிகளின் சங்கமத்தில் அமைந்துள்ள ஒரு நகரம்.
இமயமலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள பாகேஷ்வர் இயற்கை அழகைக் கொண்டுள்ளது. பகேஷ்வர் சிவன், பாக்நாத் மற்றும் பைஜ்நாத் போன்ற பழமையான இந்துக் கோயில்களைக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பாகேஷ்வரில் பிக்ஹோதி மேளா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். திருவிழாவின் சிறப்பம்சமாக பாரம்பரிய குமாவோனி நடனம், இப்பகுதியின் பிரபலமான நாட்டுப்புற நடனம் ஆகும்.
இமயமலையின் அடிவாரத்தில் குமாவோன் பகுதியில் அமைந்துள்ள பாகேஷ்வர் இயற்கை அழகு நிறைந்த நகரமாகும். இயற்கை அழகு கம்பீரமான மலைகள், பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் அழகான ஆறுகள் நிறைந்தது. பாகேஸ்வரில் உள்ள பிண்டாரி பனிப்பாறை மற்றும் சுந்தர்துங்கா பனிப்பாறை ஆகியவை பிரபலமான மலையேற்ற இடங்களாகும்.
இத்தகைய இயற்கை அழகை பெருமைப்படுத்தும் சுந்தரதுங்கா பனிப்பாறையில் 16,500 அடி உயரத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் விதிமுறைகளுக்கு மாறாக கோயில் கட்டப்பட்டுள்ளது. பாபா யோகி சைதன்ய ஆகாஷ், தன்னைக் கடவுள் என்று அறிவித்துக் கொண்டவர் இந்தக் கோயிலைக் கட்டினார்.
பகவதிம்மன் தனது கனவில் தோன்றி, சுந்தரதுங்கா பனிப்பாறையில் உள்ள தேவி குண்டத்தில் கோயில் கட்ட உத்தரவிட்டதாகவும், கோயில் கட்டும் திட்டத்திற்கு உள்ளூர் கிராம மக்களின் ஆதரவைப் பெற்றதாகவும் அவர் கூறுகிறார்.
இந்த தேவி குண்டம் உள்ளூர் மக்களுக்கு மட்டுமின்றி இந்துக்களுக்கும் மிகவும் புனிதமான வழிபாட்டுத் தலமாகும். புனிதமான தேவி குண்டம் இப்போது பாபாவின் நீச்சல் குளம். தேவி குண்டில் பாபா குளிப்பது பகவதி தேவியை மட்டுமல்ல இந்து மதத்தையும் அவமதிக்கும் செயல் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், பல நூற்றாண்டுகளாக, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நந்தராஜ் யாத்திரையின் போது தங்கள் தெய்வங்கள் தேவி குண்டிற்கு வருவதாகவும், இந்த பாபா கிராம மக்களை தவறாக வழிநடத்தி, அவர்களின் பாரம்பரியத்திற்கு எதிராக இந்த கோவிலை கட்டியதாகவும் உள்ளூர்வாசிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மக்களின் எதிர்ப்பால் உரிய அரசு அனுமதியின்றி கட்டப்பட்ட இக்கோயில் குறித்து அரசு விசாரணையை தொடங்கியுள்ளது.
ஆக்கிரமிப்பை அகற்ற வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய் அலுவலகம் அடங்கிய குழு விரைவில் தேவி குண்டிற்குச் சென்று பாபா யோகி சைதன்யா ஆகாஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் அனுராக் ஆர்யா தெரிவித்தார்.
கனிம வளம் மிக்க நிலங்களை கோவில் என்ற பெயரில் உரிய அனுமதி பெறாமல் தனி நபர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்பது இந்திய பாரம்பரிய இடங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.