மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாணயத்தின் விலையை 2 ஆயிரத்து 500 ரூபாயாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் நினைவு நாணயம் வெளியிட வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நாணயத்தை தயாரித்து வெளியிட அனுமதி வழங்கிய மத்திய அரசு, கடந்த 12ம் தேதி அரசிதழில் வெளியிட்டது.
இந்த 100 ரூபாய் நினைவு நாணயத்தின் கலவை மற்றும் விலை குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நாணயத்தின் ஒரு பக்கம் அசோகரின் சிங்கத்தலையுடன் கூடிய தூண் மற்றும் சத்யமேவ ஜெயதே, தேவநாகரி எழுத்தில் பாரத் மற்றும் ஆங்கிலத்தில் இந்தியா என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
நாணயத்தின் மறுபுறம் கருணாநிதியின் உருவப்படமும், தமிழ் வெல்லும் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இந்த நாணயத்திற்கு மத்திய அரசு 2 ஆயிரத்து 500 ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளது.
நாணயம் அச்சிடப்பட்டவுடன், ரிசர்வ் வங்கியின் கடைகள் மற்றும் தபால் நிலையங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Discussion about this post