70 ஆண்டுகளாக தங்களுக்கு மறுக்கப்பட்ட குடியுரிமை வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த அகதிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
மேற்கு பாகிஸ்தான் அகதிகள் சங்கத் தலைவர் லபா ராம் காந்தி, டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்தார். கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவில் குடியுரிமை மறுக்கப்பட்டு வந்த தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசுக்கு மேற்கு பாகிஸ்தான் அகதிகள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் அவர்கள் இடமாற்றத்தின் துயரமான காலகட்டத்தில் உறுதியான ஆதரவையும் உதவியையும் வழங்கியுள்ளது என்று அவர் கூறினார். இந்திய சமுதாயத்தில் அவர்களை ஒருங்கிணைத்து அவர்களின் நலனை உறுதி செய்வதும், அவர்களிடம் காட்டும் கருணையும் தங்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Discussion about this post