மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு தொடர்பில் இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் உலகளவில் 40 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. தற்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் உள்ளது.
பெரும்பாலான மைக்ரோசாஃப்ட் சேவைகள் மென்பொருள் புதுப்பிப்புகளில் ஏற்படும் மாற்றங்களால் பாதிக்கப்படுகின்றன. புதிய அப்டேட்டிற்குப் பிறகு தங்கள் கணினியில் ‘புளூ ஸ்கிரீன் ஆஃப் டெத்’ வருவதால் பயனர்கள் குழப்பமடைந்துள்ளனர். பெரும்பாலான விண்டோஸ் பயனர்கள் மரணத்தின் நீல திரையை அனுபவித்திருக்கிறார்கள்
இதன் காரணமாக விமான சேவைகள், சந்தைகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், பங்குச்சந்தைகள் என பல்வேறு துறைகளில் பணிகள் முடங்கியுள்ளன. இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது. பிரச்சனை என்னவென்று அடையாளம் காணப்பட்டது; மென்பொருள் சிக்கலைத் தீர்க்க மைக்ரோசாப்ட் தனது முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது. மத்திய அரசின் தொலைத்தொடர்பு அமைப்புகள் பாதிக்கப்படவில்லை. ரயில் சேவையில் எந்த பாதிப்பும் இல்லை என்றார்.
Discussion about this post