நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடல்.
இந்தியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடிக்கு பிரதமர் லக்சன் வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியா-நியூசிலாந்து உறவுகள் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள் மற்றும் மக்களுக்கு இடையேயான நெருங்கிய உறவுகளின் அடிப்படையில் நிறுவப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு, இருதரப்பு ஒத்துழைப்பை வரும் ஆண்டுகளில் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கான தங்கள் உறுதியை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
இரு தரப்புக்கும் இடையேயான சமீபத்திய உயர்மட்ட தொடர்புகளால் உருவாக்கப்பட்ட வேகத்தை எடுத்துக்காட்டி, வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு, கால்நடை வளர்ப்பு, மருந்துகள், கல்வி மற்றும் விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு ஒத்துழைப்பை முன்னெடுக்க ஒப்புக்கொண்டனர்.
நியூசிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் நலன்களைக் கவனித்து வந்ததற்காக பிரதமர் லக்சனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான முயற்சிகள் தொடரும் என்று பிரதமர் லக்சன் உறுதியளித்தார்.
Discussion about this post