கேரளாவுக்கு சிறப்பு வெளியுறவு செயலரை அம்மாநில அரசு நியமித்ததற்கு பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது.
கேரள தொழிலாளர் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் வாசுகி, கூடுதல் பொறுப்பாக வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அரசியல் சட்டப்படி, மத்திய அரசின் பட்டியலில், வெளிவிவகாரத் துறை இருப்பதால், கேரள அரசு தன்னிச்சையாக செயல்படுகிறது என, பா.ஜ., மாநில தலைவர் கே.சுரேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வெளிவிவகாரத்தில் தலையிட இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுக்கு உரிமை இல்லை என்ற போதிலும், கேரளாவை சுதந்திர மாநிலமாக்க ஆளும் கட்சி முயற்சிக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
Discussion about this post