சாலையோர வியாபாரிகளுக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்கள் அடங்கிய இணையதளத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தொடங்கி வைத்தார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜே.பி.நட்டா, அனைவருக்கும் அதிகாரம் அளிப்பதுதான் பிரதமர் மோடியின் நோக்கம் என்றும், பயிற்சி பெற்று, தனது வேலையை நல்ல முறையில் செய்வதுதான் அதிகாரமளித்தல் என்பதன் அர்த்தம் என்றும் விளக்கினார்.
பயிற்சியுடன் ஒரு செயலைச் செய்வதற்கும் பயிற்சியின்றிச் செய்வதற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதாகவும், அதேபோல திறமையானவர்களுக்கும் திறமையற்றவர்களுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாகவும் அவர் கூறினார்.
சாலையோர வியாபாரிகளுக்கான பயிற்சி திட்டத்தின் கீழ், பயிற்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.