குஜராத்தில் புதிதாக சண்டிபுரா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து, ஒவ்வொரு கிராமம் மற்றும் சமூக நல மையங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
குஜராத்தில் புதிதாகத் தோன்றிய சண்டிபுரா வைரஸ் பல்வேறு மாவட்டங்களில் பரவி வருகிறது. குஜராத் சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல் கூறுகையில், ஹிம்மாத்பூர் பகுதியில் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 7 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.
குஜராத்தில் மொத்தம் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார். இதையடுத்து, ஒவ்வொரு கிராமம் மற்றும் சமூக நலக்கூடங்களுக்கும் இது குறித்த தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல், கலெக்டர்கள், முதன்மை மாவட்ட சுகாதார அலுவலர் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் உயரதிகாரிகளுடனும் முதல்வர் சந்திப்பு நடத்தினார்.
பாதிப்பு மற்றும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
Discussion about this post