தேசிய கிரிக்கெட் அகாடமியின் புதிய இயக்குநராக முன்னாள் கிரிக்கெட் வீரர் விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் வி.வி.எஸ்.லஷ்மண் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், இயக்குனர் தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. புதிய இயக்குநராக விக்ரம் ரத்தோர் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.