நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடையும் வகையில் இருக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, பிரதமர் மோடி, பார்லிமென்ட் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசியவர்,
நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமையும் என்றார்.
வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்தை விட இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, வளர்ந்த இந்தியா என்ற இலக்கில் இந்த பட்ஜெட் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்றார்.
சில கட்சிகள் எதிர்மறை அரசியல் செய்வதாக கூறிய பிரதமர் மோடி, சட்டசபையை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Discussion about this post