கடந்த 58 ஆண்டுகளாக இருந்து வந்த தடையை நீக்கி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மத்திய பணியாளர்களுக்கு 58 ஆண்டுகளாக இருந்து வந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.
பொதுவாக அரசு ஊழியர்கள் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இருக்கக் கூடாது என்பது அரசு விதி. இந்த விதியின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அல்லது இந்துத்துவா இயக்கத்தில் உறுப்பினர்களாக இருக்கக் கூடாது என்பது அரசு விதியாக இருந்தது.
1966-ம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்-ன் செயல்பாடுகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது. இப்போது மத்திய ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி அமைச்சகம், பணியாளர், சிவில் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Discussion about this post