மத்திய அரசு பட்ஜெட்டை அறிவித்துள்ள நிலையில், ஒரு ரூபாய் வருமானம், செலவு எவ்வளவு என்று பார்ப்போம்.
ஒரு ரூபாயில் 4 பைசா ஓய்வூதியத்துக்கும், 21 பைசா மாநில வரி பகிர்வுக்கும், 9 பைசா நிதி கமிஷன் செலவுக்கும், 16 பைசா மத்திய துறை திட்டங்களுக்கும், 8 பைசா பாதுகாப்புக்கும் செலவிடப்படுகிறது.
அதேபோல், அந்த ஒரு ரூபாயில் 8 பைசா மத்திய அரசின் உதவித் திட்டங்களுக்கும், 6 பைசா மானியங்களுக்கும், 19 பைசா வட்டிக்கும், 9 பைசா இதர செலவுகளுக்கும் செலவிடப்படுவதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், வருமான வரியில் 19 பைசாவும், கலால் வரியில் 5 பைசாவும், நிறுவன வரியில் 17 பைசாவும், சரக்கு மற்றும் சேவை வரியில் 18 பைசாவும், சுங்க வரியில் 4 பைசாவும் வருமானமாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கடன் உள்ளிட்ட வருவாயில் 27 பைசாவும், கடன் அல்லாத மூலதன ரசீதில் 1 பைசாவும், வரி அல்லாத வருவாய் ரசீதில் 9 பைசாவும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Discussion about this post