மத்திய பட்ஜெட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிகாரம் அளிக்கும் அம்சங்கள் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்த பட்ஜெட் பெண்கள், சிறு வணிகர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் என்றும் கூறினார்.
இந்த பட்ஜெட் மூலம் இளைஞர்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பட்ஜெட் உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
இந்த பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினருக்கானது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த பட்ஜெட்டில் பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் உள்ளதாக கூறினார்.
முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
Discussion about this post