மத்திய பட்ஜெட்டை அரசியல் கண்ணோட்டத்தில் அணுகாமல் மக்கள் பார்வையில்தான் அணுக வேண்டும் என மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை கண்டித்து அகில இந்திய கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, ஆர்ப்பாட்டம் நடத்துவது எதிர்க்கட்சிகளின் கடமை என்றால் அதை நடத்தட்டும்.
இது முழு நாட்டிற்கான பட்ஜெட் என்று கூறிய அவர், நடுத்தர வர்க்கத்தினரை அரவணைப்பதே இப்போதைய தேவை என்றார்.
வேலை தேடுவோருக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க பட்ஜெட் உத்வேகம் அளித்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் அரசியல் கண்ணோட்டத்தில் அல்லாமல் பொதுமக்களின் பார்வையில் பட்ஜெட்டை அணுக வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
Discussion about this post