சார்தாம் திட்டத்தில் இதுவரை 616 கிலோமீட்டர் சாலைப் பணிகள் முடிவடைந்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
இமயமலைப் பகுதியில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார். இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை மேற்கொள்வதற்கு முன், புவியியல், புவிசார் தொழில்நுட்பம், நீர்நிலை மற்றும் நிலப்பரப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு புனிதத் தலங்களை இணைக்கும் சாலைகள் மற்றும் கைலாஷ் – மானசரோவர் யாத்திரைப் பாதையில் தனக்பூர் முதல் பித்தோராகர் வரையிலான சாலைகள் உட்பட தற்போதுள்ள 5 தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த சார்தாம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
825 கி.மீ நீளமுள்ள 616 கி.மீ நெடுஞ்சாலையின் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
Discussion about this post