வரும் 2025-26 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்துக்குக் கீழே கொண்டு வருவோம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்த அவர், தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசை தேர்ந்தெடுத்ததற்காக பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் மத்திய அரசின் திட்டங்களை உணர்ந்து, பொதுமக்கள் மீண்டும் அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று கூறினார்.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், நிதிப் பற்றாக்குறையின் போக்கை உணர்ந்து, 2025-26 நிதியாண்டில் அதை 4.5 சதவீதத்துக்குக் கீழே கொண்டு வருவோம் என்று சூசகமாகத் தெரிவித்தார்.
Discussion about this post