கேரளாவின் வயநாட்டில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சேவா பாரதி அமைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இறந்தவரின் உடல் தகனத்தையும் செய்து வருகின்றனர்.
வயநாட்டில் இடைவிடாத மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 200 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், மேலும் பலர் காணவில்லை.
நிலத்தில் புதையுண்டவர்களை மீட்கும் பணியில் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் ஆர்எஸ்எஸ் சேவா பாரதி அமைப்பினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நிலச்சரிவில் முற்றாக பாதிக்கப்பட்ட சூரமலா பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் பணியை சேவா பாரதி அமைப்பினர் தற்காலிக தகன மேடையில் செய்து வருகின்றனர். இதேபோல், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சேவை அமைப்புகளும் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
சேவா பாரதி அமைப்பினர் நிலச்சரிவு ஏற்பட்ட சூரமலை பகுதியில் நிவாரண மையம் அமைத்து மக்களுக்கு உணவு வழங்கி வருவதுடன், அவர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளா மட்டுமின்றி, தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், ஆர்.எஸ்.எஸ்., சேவா பாரதி அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் முகாமிட்டு, ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post