பட்டியலின பழங்குடியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
2005ல், 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உள் இடஒதுக்கீடு என்பது இடஒதுக்கீட்டின் நோக்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதுடன், ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் சமூகங்களுக்கு சமமான வாய்ப்பை வழங்குகிறது என்றார்.
இதையடுத்து, 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினருக்கு மாநில அரசுகள் உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என தீர்ப்பளித்தது.
எனவே அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் நீதிபதி பேலா திரிவேதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். உள் இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவை மீறவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Discussion about this post