பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
ஆடவர் ஹாக்கி பி பிரிவில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் 2-1 என முன்னிலை வகித்த இந்தியா, இறுதியில் ஆஸ்திரேலியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது லீக் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. மேலும் 3 வெற்றி, 1 டிராவுடன் இந்தியா 10 புள்ளிகளுடன் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
Discussion about this post