கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குகைக்குள் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் உள்பட 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மலையில் ஏறி குகைக்குள் தஞ்சம் புகுந்தனர்.
பின்னர், அவர்கள் குகையின் மீது ஏறி உதவி கேட்டு அலறினர். இதையறிந்த மீட்புக் குழுவினர் கடும் சவால்களுக்கு மத்தியில் அப்பகுதிக்கு வந்து சுமார் நான்கரை மணி நேரம் போராடி 6 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
Discussion about this post