தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள பகுதிகளில் ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானில் அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதல்களை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி பைசலாபாத், ஜீலம், சக்வால் ஆகிய நகரங்களில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள பகுதிகளில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பஞ்சாப் மாகாணத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு ராணுவ வீரர்கள் ரோந்து சென்றனர். அப்போது ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கமாண்டர் அப்துல் வஹாப் உள்பட 3 பேரை ராணுவத்தினர் கைது செய்தனர். மற்ற இரண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் சைபுல்லா மற்றும் குர்ரம் அப்பாஸ் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனிடையே அவர்களிடம் இருந்து வெடிமருந்துகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.