வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து ஆறாவது நாளாக நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரை 215 சடலங்களும் 143 உடல் உறுப்புகளும் மீட்கப்பட்டுள்ள நிலையில் 361 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 98 பேர் ஆண்கள், 87 பேர் பெண்கள் மற்றும் 30 பேர் குழந்தைகள். இதேவேளை, 148 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
1,300க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் களத்தில் உள்ளதாகவும், 6வது நாளாக மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் மேகஸ்ரீ தெரிவித்தார்.
Discussion about this post