வினேஷ் போகட் 7-5 என்ற கணக்கில் ஒக்ஸானா லிவாச்சை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இந்தியா இதுவரை 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இதற்கிடையில், மல்யுத்தம் – பெண்கள் பிரெஸ்டைல் 50 கிலோ பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் வினேஷ் போகட், உக்ரைனின் ஒக்ஸானா லிவாச்சுடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இருவரும் மாறி மாறி புள்ளிகளைப் பெற்றனர். இறுதியில், வினேஷ் போகட் 7-5 என்ற கணக்கில் ஒக்ஸானா லிவாச்சை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் அரையிறுதியில் வினேஷ் போகட், கியூபாவின் யுஸ்னிலிஸ் குஸ்மான் லோபசை எதிர்கொள்கிறார்.
Discussion about this post