சந்திரயான் – 3 திட்ட விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு ராஷ்ட்ரிய விக்யான் புரஸ்கார் விருது வழங்க மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சந்திரயான்-3 லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனையை உலகமே பாராட்டியது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பி.வீரமுத்துவேல் தலைமையிலான சந்திரயான்-3 திட்டக் குழுவைப் பாராட்டி மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. இதன்படி, இந்த திட்டத்தில் பங்களித்த 33 விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு ராஷ்ட்ரிய விக்யான் புரஸ்கார் விருது வழங்குவதற்கான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.
Discussion about this post