பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும், பெண்களும் அபார திறமையை வெளிப்படுத்தி பதக்க வேட்டை நடத்தி வருகின்றனர். இதுவரை, விளையாட்டுப் போட்டிகளின் முடிவில் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அதன்படி அமெரிக்கா 30 தங்கம், 38 வெள்ளி, 35 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. சீனா 29 தங்கம் உட்பட 73 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா 18 தங்கம் உட்பட 45 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களுடன் 64வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்று எந்தெந்த போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர் என்பதை பார்க்கலாம்..!
தடகளம்:- ஜோதிகா ஸ்ரீ தண்டி, சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ், பூவம்மா (மகளிர் 4×400 மீ தொடர் ஓட்டம் முதல் சுற்று), மதியம் 2.10 மணி. முகமது அனஸ், முகமது அஜ்மல், அமோஜ் ஜேக்கப், ஆரோக்கிய ராஜீவ் (ஆண்கள் 4×400 மீ தொடர் ஓட்டம் முதல் சுற்று), மதியம் 2.35 மணி.
மல்யுத்தம்:- அமன் ஷெராவத் (இந்தியா)- டேரியன் குரூஸ் (புவேர்ட்டோ ரிக்கோ), (ஆண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் வெண்கலப் பதக்கப் போட்டி), இரவு 10.45 மணி.
Discussion about this post