ஹாக்கி அணியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என இந்திய ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் தோல்வியடைந்த இந்தியா மற்றும் ஸ்பெயின் அணிகள் நேற்று நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. தொடர்ந்து 2வது முறையாக இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி, அதிபர் திராபுபதி முர்மு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதவிர, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பஞ்சாபை சேர்ந்த ஆக்கி வீரர்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், வெண்கலப் பதக்கம் வென்ற ஆக்கி அணி வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சமும், அந்த அணியின் உதவியாளர்களுக்கு தலா ரூ.7.5 லட்சமும் வழங்கப்படும் என இந்திய ஆக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.
Discussion about this post