வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து ஆய்வு குழுவில் திமுக, காங்கிரஸ், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், இந்த மசோதாவை ஆய்வு செய்ய கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று கூட்டுக்குழு அமைக்கப்படும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 31 பேர் கொண்ட கூட்டுக் குழுவை அமைத்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இந்த மசோதாவை ஆய்வு செய்ய பாஜகவின் ஜெகதாம்பிகா பால் தலைமையில் கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டுக் குழுவில் ஆ.ராசா, ஒவைசி, இம்ரான் மசூத், தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவில் திமுக, காங்கிரஸ், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் கூட்டுக் குழு, மசோதாவை ஆய்வு செய்து, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும்.
Discussion about this post