நிலச்சரிவு பாதித்த வயநாட்டை பிரதமர் மோடி நாளை பார்வையிட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அங்கு மீட்பு பணி வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், மீட்பு பணிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி நாளை வயநாடுக்கு வர உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதையொட்டி, டெல்லியில் இருந்து காலை 11 மணிக்கு விமானம் மூலம் கண்ணூர் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து புறப்பட்டு வயநாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானம் மூலம் பார்வையிட்டார். பின்னர் மதியம் 12.15 மணிக்கு அதிகாரிகளை சந்தித்து மீட்பு பணியின் நிலை குறித்து பிரதமர் மோடி கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post