பங்களாதேஷில் இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களை வங்காளதேச இடைக்கால அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் வலியுறுத்தியுள்ளார்.
ராஷ்டிரிய சுவாமி சேவக் சங்கத்தின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோஸ்பல்லே வெளியிட்ட அறிக்கையைச் சுட்டிக்காட்டி சுனில் அம்பேத்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசியவர்,
பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக இந்துக்கள், பௌத்தர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் கவலை அளிப்பதாகவும், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு எதிரான வன்முறை, திட்டமிட்ட கொலை, சொத்துக் கொள்ளை போன்ற சம்பவங்களை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கு உலக நாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் சுனில் அம்பேத்கர் கேட்டுக் கொண்டார்.
Discussion about this post