நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டில் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 29ம் தேதி தொடர்ந்து 3 முறை நிலச்சரிவு ஏற்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 420 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளில் இருந்து உடல்கள் மற்றும் உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்படுகின்றன. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நிலச்சரிவால் நாசமடைந்த வயநாட்டில் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இப்பணிகளை மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ், வனத்துறை அமைச்சர் சசீதரன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
வயநாட்டில் பேரிடர் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழுவிடம், புனரமைப்பு பணிகளுக்கு உடனடி நிதியை கோரியுள்ளோம். நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க மத்திய அரசிடம் ரூ.2 ஆயிரம் கோடி கேட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், வயநாட்டில் துப்புரவு பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும், அதற்கு 90 நாட்கள் மட்டுமே ஆகும் என்றும் தெரிவித்தனர்.
Discussion about this post