காலிறுதிச் சுற்றில் ரித்திகா ஹூடா – ஐபெரி மெடெட் மோதினர்.
33வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியின் காலிறுதிப் போட்டியில் (76 கிலோ எடைப் பிரிவு) இந்தியாவின் ரித்திகா ஹூடாவும், உலகின் நம்பர் 1 வீராங்கனையான கிர்கிஸ்தானின் ஐபெரி மெடாட்டும் மோதினர்.
இந்தப் போட்டியில் ரித்திகா போராடி கடைசி நிமிடத்தில் டை பிரேக்கரில் தோற்றார். இதன் மூலம் ஐபெரி மெடாட் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்
இந்தப் போட்டியில் தோல்வியடைந்தாலும், கிர்கிஸ்தான் வீராங்கனை ஐபெரி மெடாட் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால் ரித்திகாவுக்கு ‘ரீபீச்’ முறையில் வெண்கலப் பதக்கப் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.
Discussion about this post