மணிப்பூர் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் வெடிகுண்டு வெடித்ததில் மனைவி உயிரிழந்தார்
மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் முன்னாள் எம்எல்ஏவின் மனைவி வீட்டில் வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்தார். கடந்த 2012 மற்றும் 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில் சைகுல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட யாம்தோங் ஹகிப் (வயது 64) 2022ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இவரது மனைவி சபம் சாருபாலா (வயது 59). இவர் நேற்று மாலை 3 மணியளவில் வீட்டில் இருந்த குப்பைகளை எரித்தார். அப்போது அதில் திடீரென வெடிகுண்டு வெடித்து பலத்த காயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து இன்று காலை யாம்தாங் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்னர் காணி கொள்வனவு தொடர்பில் ஹோகிப்புக்கும் அவரது உறவினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக நாட்டு வெடிகுண்டை குப்பையில் மறைத்து வைத்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குண்டுவெடிப்பு நடந்தபோது ஹாக்கிப்பும் வீட்டில் இருந்தார், ஆனால் காயம் ஏற்படவில்லை.
Discussion about this post