தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு ராஜினாமா செய்துள்ளார்
தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு திடீரென ராஜினாமா செய்துள்ளார். குஷ்புவின் ராஜினாமாவை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 பிப்ரவரி 27-ம் தேதி, பா.ஜ.க. பிரமுகர் குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தற்போது, பா.ஜ.க.வில் தேசிய செயற்குழு உறுப்பினராக குஷ்பு செயல் படுகிறார்.
Discussion about this post